×

திமுகவில் வாரிசு அரசியல் என பேசும் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லையா?: ஆர்.எஸ்.பாரதி கேள்வி

சென்னை: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆளும் அதிமுக அரசை கண்டித்து  பொதுக்கூட்டம் செய்யூர் திரவுபதி அம்மன் கோயில் திடலில் நடந்தது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். லத்தூர் ஒன்றிய அமைப்பாளர்கள் கே.எஸ்.ராமச்சந்திரன், எம்.எஸ்.பாபு வரவேற்றனர். மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: அமைச்சர்  ஜெயக்குமார், திமுகவில் வாரிசு அரசியல் செய்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகிறார். அப்படியானால், அவருடைய தந்தை திமுகவால் கவுன்சிலர் ஆனார். இவர் இப்போது எம்எல்ஏவாக இருக்க, இவருடைய மகன் எம்பிக்கு போட்டியிட்டார். அவர், அரசியல் வாரிசு  இல்லையா. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அவரது துணைவியார் ஜானகியம்மாள் முதலமைச்சர் ஆனார். அதேபோல் சினிமாவில் எம்ஜிஆருக்கு அதிக படங்களில் துணைவியாக  நடித்தவர் ஜெயலலிதா. அதன் அடிப்படையில் மக்கள் இவரை முதல்வராக்கினர். அப்படி என்றால் இதுவும் ஒரு வாரிசு அரசியல் தானே.

வாரிசு அரசியல் அதிமுகவில் இல்லை என்றால், அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் உடல்நிலை பாதித்து, சிகிச்சை பெற்றபோது ஆர்.எம்.வீரப்பனை முதலமைச்சராக இருக்க வைத்து அழகு பார்த்தார். அவரை ஏன் முதலமைச்சராக்கவில்லை. கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.  அவர் மீது ஒரு ஊழல் குற்றமோ, குற்றச்சாட்டோ என்பது உண்டா. சுத்தமான அரசியல் மக்களுக்கான ஆட்சியை அவர் நடத்தினார். ஊழல் குற்றம் செய்து அதன் பெயரில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவித்து, குற்றவாளியான ஜெயலலிதா (ஏ1) குற்றவாளியாகவும், அவருக்கு நெருங்கிய தோழி சசிகலா (ஏ2) குற்றவாளியாகவும் ஊழலோ செய்யவில்லை, நிரூபணமும் இல்லை. ஆனால் ஏ1 குற்றவாளிக்கு துணையாக இருந்தது தான் இவர் மீது வழக்கு. ஊழல் குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவருக்கு அரசு ஆடம்பர விழா நடத்துவது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். டெல்லிக்கு சென்ற எடப்பாடி, ஜெயலலிதா நினைவிடம் திறக்க மோடியையும், அமித்ஷாவையும் அழைத்தார்.

அவர்கள் ஏன் வரவில்லை. கவர்னரும் வரவில்லை. நினைவிடம் திறப்பதற்கு முந்தையநாள் தான் குடியரசு தின விழா நடந்தது. அங்கு வந்த கவர்னர் அந்த அம்மையாரின் நினைவிடத்துக்கு ஏன் வரவில்லை. தண்டனை பெற்றவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அவர்களுக்கு  சட்ட சிக்கல் வரும் என்பதற்காக யாரும் வரவில்லை. தமிழகத்தில் எடப்பாடி உறவினர்கள் ₹6 ஆயிரம் கோடி ஒப்பந்த வேலை பெறப்பட்டு, அதன் மூலம் வேலை நடக்கிறது. ஆனால் இவருடைய வேலை விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட அணை ஒன்றே அதற்கு உதாரணமாக இருக்கிறது. அணை கட்டி முடித்து 3 மாதத்தில் உடைந்து இருப்பது உதாரணம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் ஆர்.டி.அரசு, வக்கீல் எழிலரசன், நிர்வாகிகள் ராமலிங்கம், ஆறுமுகம், கே.குமார், பி.எம்.குமார், தரன், கண்ணன், ஞானசேகரன், சேகர் டி.குமார், குமணன், சத்யசாய், ஏழுமலை, தம்பு, சரவணன், சிற்றரசு, பூபாலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : no one ,Jayakumar ,DMK , Is there no one in the family of Minister Jayakumar who speaks as the successor politics in DMK?
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...