×

தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் 4 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

திண்டிவனம்: பா.ம.க.  சார்பில் இன்று இணையவழி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இணையவழி நிர்வாகக்குழு கூட்டத்தில் 20 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்தும், அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு 7.40 மணி முதல் 8.45 மணி வரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை சிந்தித்து பேசினர். அப்போது கூட்டணி குறித்தும், வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது. இன்று நடைபெறும் இணையவழி நிர்வாக குழு கூட்டம் பாமக தரப்பில் முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என்பதால் அமைச்சர்கள் கடைசி முயற்சியாக ராமதாஸை சமாதானம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.


Tags : ministers ,Ramdas , P.M.K. 4 ministers meet with founder Ramdas
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...