×

திருமணத்துக்கு துணி வாங்க சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதி மணமகள் உட்பட6 பேர் பலி

திருமலை: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் திருமண ஜவுளி வாங்கச்சென்ற மணமகள் மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.  தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டம், மர்ரிமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரமிளா(24). பட்டதாரியான இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவர்கள் குடும்பத்தினர் தீவிரமாக செய்து வந்தனர். திருமணத்துக்கு துணிகள் வாங்குவதற்காக பிரமிளா, அவரது குடும்பத்தின5 பேர்  ஆட்டோ ஒன்றில் வாரங்கல்லுக்கு நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில்  சென்றனர். துணிக்காக ₹5 லட்சம் பணமும் கொண்டு ெசன்றனர்.  ஊரில் இருந்து சற்று தூரம் சென்று தேசிய நெடுஞ்சாலை வளைவில் திரும்பியபோது,  இவர்களின் ஆட்டோ மீது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இதில், ஆட்டோ நொறுங்கியது. பிரமிளா அவரது தாய், சகோதரி, சகோதரன், உறவினர் மற்றும் ஆட்டோ டிரைவர்  என 6 பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். லாரி டிரைவர் தப்பி விட்டார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்தும் பிரமிளாவின் உறவினர்கள், அவர்கள் கொண்டு சென்ற ₹5 லட்சம் பணம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால், போலீசார் சரியாக பதில் அளிக்கவில்லை. இதை கண்டித்து உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பணத்தை திருடி சென்றவர்களை கைது செய்யும்படியும், இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : bride ,wedding , 6 people including the bride were killed when a lorry collided with an auto while going to buy clothes for the wedding
× RELATED பிரபல மலையாள டைரக்டர் ஒமர் லுலு மீது நடிகை பலாத்கார புகார்