சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அடுத்தடுத்த சீட்டில் ஓபிஎஸ்-குஷ்பு பயணம்

சென்னை:சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து ஓபிஎஸ்-குஷ்பு பயணம் செய்தனர். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று காலையில் விமானம் மூலம் சென்றனர். சென்னை விமானநிலையத்தில் விஐபிக்களுடன் பாஜக தலைவர்கள் சிலரும் சென்றனர். அதில் விமானத்தில் விஐபிக்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அதில், துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் அருகில் ஜன்னல் ஓர இருக்கையில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு அமர்ந்திருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதுபோன்ற போட்டோவை தனது செல்போன் மூலம் படம் எடுத்து, அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது ட்ரென்ட்டாகி வருகிறது.

Related Stories: