×

“தியாகத்தின் மறு உருவம், எங்களின் ராஜமாதாவே ”: சசிகலாவை வரவேற்று தேனி, தஞ்சையில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள்!!

தேனி : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். விடுதலையாவதற்கு முன்பு சிறையிலிருந்த அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சசிகலாவை வரவேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரும் போட்டி போட்டு கொண்டு போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டும் அதிமுகவினரை கட்சியிலிருந்து மேலிடம் அதிரடியாக நீக்கி வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அதிமுக ஒன்றிய  இளைஞரணி தலைவர் சின்னராஜா என்பவர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.  இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில், தமிழ் நாட்டை வழிநடத்த வருகைதரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக! வருக! ” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவுக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், முன்னாள் தொகுதி செயலாருமான அரசங்குடி ந.சுவாமிநாதன் என்பவர் சசிகலாவை வரவேற்று திருவெறும்பூர் பகுதி உள்பட பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், அம்மா அவர்களின் அன்பு சகோதரி, தியாக தலைவி சின்னம்மா, கழகம் காத்திட, பொதுச்செயலாளர் பணியை தொடர்ந்திட வருக வருக என வரவேற்கிறேன், தியாக தலைவி சின்னம்மாவின் உண்மை விசுவாசி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரால் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : executives ,AIADMK ,Sasikala ,Thanjavur ,Theni , Sasikala, Theni, Tanjore, Poster, AIADMK
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...