பத்ம ஸ்ரீ விருது வென்ற பாப்பம்மாளுக்கு 'அங்கக வழி விவசாய உற்பத்தியாளர்களின் தூதர்'பட்டத்தை ஏற்றுக் கொள்க : அபேடா தலைவர் கடிதம்!!

டெல்லி : மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுக்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி பாப்பம்மாளைப் பாராட்டியுள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, அங்கக வழி (இயற்கை வழி) விவசாய உற்பத்தியாளர்களின் தூதர் என்னும் விருதை ஏற்குமாறும் அவரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து திருமதி பாப்பம்மாளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், 72-வது குடியரசு தின நிகழ்வின் போது இந்திய அரசால் உங்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பதற்கு, எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும், மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

2.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மையை, குறிப்பாக சிறுதானியங்கள், பருப்பு வகைகள், சோளம் மற்றும் சமீபத்தில் வாழை சாகுபடியை மேற்கொள்வதில் திருமதி பாப்பம்மாள் வெளிப்படுத்தியுள்ள பேரார்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் தனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருப்பதாக அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

அங்கக வழி விவசாயத்தை நடைமுறையில் பின்பற்றுவதிலும், விவசாயிகளை வழி நடத்துவதிலும் திரு பாப்பம்மாள் காட்டியிருக்கும் நிகரற்ற அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் பாராட்டி கவுரவிக்கும் வகையில், அங்கக வழி விவசாய உற்பத்தியாளர்களின் தூதர் என்ற விருதை அவர் ஏற்க வேண்டும் என்று டாக்டர் அங்கமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். முற்போக்கு விவசாயிகளுக்கு இது உத்வேகமளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>