×

பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால் புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரை வாபஸ்!!

டெல்லி : புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கொலீஜியம் வாபஸ் பெற்றது. பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்து சர்ச்சையில் சிக்கியதால் புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கொலீஜியம் திரும்பப் பெற்றது. மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு கூடுதல் நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி முதல் பணியாற்றி வருபவர் புஷ்பா கே திவாலா. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் கொண்ட கொலீஜியம், கூடுதல் நீதிபதியாக இருக்கும் புஷ்பா கே திவாலாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இதனிடையே போக்ஸோ சட்டத்தின் கீழ் உள்ள 3 பாலியல் வழக்குகளுக்கு நீதிபதி புஷ்பா கே திவாலா சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு அளித்திருந்தார்.

நீதிபதி புஷ்பா கே திவாலா வழங்கிய 3 தீர்ப்புகள்

* பெண்களை ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டலாகாது என கடந்த ஜனவரி 14ம் தேதி வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி புஷ்பா.

* குற்றவாளியின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் சிறுமியை அவர் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது என்றும் ஜனவரி 15ம் தேதி தீர்ப்பு அளித்திருந்தார்.

*குழந்தையின் ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் பாலியல் வன்கொடுமை என்று பொருள்கொள்ள முடியாது என்றும் அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனவும் ஜனவரி 19ம் தேதி பெண் நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா அதிர்ச்சி தீர்ப்பளித்திருந்தார். .

இவ்வாறு 3 பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்து சர்ச்சையில் சிக்கியதால் புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசிடம் இருந்து உச்சநீதிமன்றம் கொலீஜியம் திரும்பப் பெற்றது.



Tags : Pushpa ,bankruptcy judge ,judge , Sex, Pushpa K Bankruptcy, Permanent Judge, Recommended
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...