×

கொரோனா வைரஸ் பரவியது எப்படி? வுகானில் ஆய்வு தொடங்கியது உலக சுகாதார நிபுணர்கள் குழு

வுகான்: சீனாவின் வுகான் நகரில் கொரோனா பரவியது எப்படி என்பது தொடர்பான ஆய்வை உலக சுகாதார நிபுணர் குழு தொடங்கி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் உருவானது எப்படி என்பதில் பெரும் சர்ச்சை நிலவுகிறது. இது தொடர்பான தகவல்களை சீனா மறைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் நிர்பந்தத்தை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் சீனாவின் வுகானில் ஆய்வு செய்ய முடிவு செய்தது.

இதற்கு சீனா பல்வேறு முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவினர் சீனாவில் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளனர். அங்கு 2 வார தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு அவர்கள் நேற்று முதல் ஆய்வை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக கள ஆய்வை மேற்கொண்டுள்ளனர். வுகான் தொழில் மற்றும் போக்குவரத்து மையத்தை சுற்றிய பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். முதல் கொரோனா நோயாளி உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பாதிப்படைந்தவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், வைரஸ் பரவியதாக கூறப்படும் ஹூனான் கடல் உணவு மார்க்கெட் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய உள்ளனர். சீன ஆராய்ச்சியாளர்களுடன் நேரடி ஆலோசனை கூட்டமும் நடத்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

Tags : corona virus spread ,Wuhan ,global health experts ,team , Corona virus, spread, in Wukan, study
× RELATED சீனாவில் அடுத்த மாதம் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்