×

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் ராமேஸ்வரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த கிருபை, வளன்கவுசிக், மிக்கோயாஸ், சாம்ஸ்டில்லர், மாரி உட்பட 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டனர். கோர்ட் உத்தரவையடுத்து இவர்கள் அனைவரும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனிடையே சமீபத்தில் 4 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கொன்றனர். இதனால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே சிறை வைக்கப்பட்டுள்ள 9 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு கடல் தொழிலாளர் சங்க மாநில தலைவர் முருகானந்தம் தலைமையில் மீனவர்களின் உறவினர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர்களை விடுவிக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களுடன் உறவினர்கள் மொபைல் போனில் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Relatives ,taluka office ,release ,Rameswaram ,fishermen ,Sri Lankan , Sri Lankan captives, fishermen, Rameswaram, relatives, struggle
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு