பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அரசியல் கட்சிகளிடம் கூட்டணி: பாஜ மாநில தலைவர் முருகன் அறிவிப்பு

மதுரை: பேச்சுவார்த்தைக்கு பிறகே கூட்டணி குறித்து கூற முடியுமென பாஜ மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.  மதுரையில் இன்று பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்ட நிகழ்விற்கான முன்னேற்பாட்டு பணிகளை நேற்று மாநில தலைவர் முருகன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆய்வு செய்தனர். பின்னர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலுக்காக மதுரையில் பிரசாரம் துவங்கி, தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி  வலிமையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட  கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். சசிகலாவின்  அரசியல் நிலைப்பாடு என்பது, அவர் வந்த பின்னர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்’’ என்றார்.

பின்னர் மதுரை விமானநிலையத்தில் முருகன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை, கட்சியினருக்கு புதிய உத்வேகம் அளிக்கிறது. வேளாண் சட்டத்தை முழுமையாக படித்தவர்கள் ஆதரிக்கின்றனர். படிக்காதவர்களே ஏற்க மறுக்கின்றனர். அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே கூட்டணி குறித்து கூற முடியும்’’ என்றார்.

Related Stories:

>