×

காஸ் கசிவால் தீவிபத்து 18 குடிசைகள் எரிந்து சாம்பல்

பல்லாவரம்: அனகாபுத்தூர் சாந்தி நகர் 7வது தெருவில் உள்ள விஜய் (24) குடிசை வீட்டில் நேற்று காஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் அருகில் இருந்த 17 குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 18 குடிசை வீடுகள் மற்றும் உள்ளே இருந்த கட்டில், பீரோ, மிக்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

Tags : Gas leak, fire, 18 huts, ash
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...