பணி நிரந்தரம் செய்யக்கோரி 5,000 தற்காலிக செவிலியர்கள் திடீர் போராட்டம்: மெரினா உழைப்பாளர் சிலை அருகே குவிந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெரினா உழைப்பாளர் சிலை அருகே திடீரென குவிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஆரம்பர சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாகி இருந்த 15 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு மூலம் 15 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்து அரசு மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆரம்ப கட்ட ஊதியமாக ₹7,800 வழங்கப்பட்டது. மேலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. பணியில் தேர்ந்து 15 செவிலியர்களை அரசு உறுதியளித்தப்படி யாரையும் பணிநிரந்தரம் செய்யப்படவில்ைல.

 இதையடுத்து, தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 15 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரி கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சம வேலை செய்யும் செவிலியர்களின் பணியின் தன்மையை ஆராய்ந்து சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் 6 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை தமிழக அரசு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி சம வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை.  எனவே, ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்பட்ட 15 ஆயிரம் செவிலியர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த திருவல்லிக்கேணி போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தனர்.

ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு திருவல்லிக்கேணி போலீசார் அனுமதி மதித்துவிட்டனர். ஆனால் திட்டமிட்டப்படி எங்களது போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.  பின்னர் திட்டமிட்டப்படி நேற்று அதிகாலை 6 மணி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களது சீருடையுடன் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு குவிய தொடங்கினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாமல் உழைப்பாளர் சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் இந்த எச்சரிக்கையை மீறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒரே இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மெரினா உழைப்பாளர் சிலை அருகே பதற்றம் ஏற்பட்டது.  பின்னர் செவிலியர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உழைப்பாளர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அனைவரும் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து அவசர அவசரமாக போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டனர்.

போலீஸ் படை குவிப்பு

செவிலியர்கள் போராட்டம் ேநற்று மாலை 6 மணிக்கு மேல் தொடர்ந்து நீடித்தது. இதனால் போலீசார் அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே நாங்கள் எங்கள் போராட்டத்தை திரும்ப பெறுவோம் என்று உறுதிப்பட கூறிவிட்டனர். இதனால் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சேப்பாக்கம் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பாக நிலை சூழ்நிலை ஏற்பட்டது.

Related Stories:

>