×

‘பொருளென்னும் பொய்யா விளக்கம்...’: திருக்குறளுடன் தொடங்கிய பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்!!!

டெல்லி : டெல்லி: கொரோனா தடுப்பூசி காரணமாக V வடிவத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளவை..

*மார்ச் மாதத்தோடு முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதமாக சரியக் கூடும்.

*இந்தப் பொருளாதார சரிவுக்கு கொரோனா பேரிடரும், அதனால் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு கட்ட ஊரடங்கும் காரணம்.

*இருப்பினும், கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறையும் பட்சத்தில் அடுத்த (2021-22) நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும்.

*நடப்பாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 6.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை இருக்கலாம்.

*கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவின் பொருளாதாரம் எந்த வேகத்தில் சரிந்ததோ, அதே வேகத்தில் உயரும்.

* அதாவது, பொருளதார குறியீட்டின்படி ‘V’ வடிவ மீட்சியில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்த ஆய்வறிக்கையில், பொருள் செயல் வகை அதிகாரத்திலிருந்து (753) திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இடம்பெற்றிருக்கும் குறள்:

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

விளக்கம்:

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடியும் என்பதே இக்குறளுக்கான விளக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

குறளுக்கேற்றாற் போல நாட்டில் நிலவும் பொருளாதார சரிவு, தலைதூக்கியிருக்கும் வேலையின்மை, மருத்துவப் பேரிடர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் இருக்குமா என்பதே அனைவரின் கேள்வி.

முன்னதாக, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டதைப் புறக்கணித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சகம் சார்பில் திட்டமிட்டபடி, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Thirukkural ,Parliament , Thirukkural, Economic Study, Parliament, Filed
× RELATED திருக்குறளில் வேள்வி!