×

பணி நிரந்தரம் செய்யக் கோரி 5 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் திடீர் போராட்டம் : மெரினா உழைப்பாளர் சிலை அருகே குவிந்ததால் பெரும் பரபரப்பு


சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெரினா உழைப்பாளர் சிலை அருகே திடீரென குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஆரம்பர சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாகி இருந்த 15 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு மூலம் 15 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிகமாக தேர்வு செய்து அரசு மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்டன.

இவர்களுக்கு ஆரம்ப கட்ட ஊதியமாக ரூ.7,800 வழங்கப்பட்டது. மேலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த 15 ஆயிரம் செவிலியர்களை அரசு உறுதியளித்தப்படி யாரையும் பணிநிரந்தரம் செய்யப்படவில்ைல.
இதையடுத்து தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 15 ஆயிரம் தற்காலிக செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரி கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சம வேலை செய்யும் செவிலியர்களின் பணியின் தன்மையை ஆராய்ந்து சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் 6 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை தமிழக அரசு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி சம வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை.

அதேபோல், படிப்படியாக அனைத்து ஒப்பந்த செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நீதிமன்றதில் அரசு உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் அரசு அளித்த உறுதிக்கு ஏற்ப இது நாள் வரை எந்த ஒப்பந்த செவிலியர்களையும் அரசு பணியில் நிரந்தரம் செய்ய வில்ைல. ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் எங்கள் உயிரை பொருட்படுத்தாமலும், விடுமுறை எடுக்காமலும் பணியாற்றி வருகிறோம்.

எங்கள் கோரிக்கை குறித்து பல முறை தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் மாவட்ட தலைநகரங்களில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்க வில்லை. எனவே, ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்பட்ட 15 ஆயிரம் செவிலியர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சக வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி  தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த திருவல்லிக்கேணி போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு திருவல்லிக்கேணி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால் திட்டமிட்டப்படி எங்களது போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

 பின்னர் திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 6 மணி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களது சீருடையுடன் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு குவிய தொடங்கினர். போலீசாரும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் கலந்து கொள்ள செவிலியர்கள் வந்துள்ளதாக நினைத்தனர். ஆனால் திடீரென அரை மணி நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தமிழக அரசுக்கு எதிராக பேனர்கள் மற்றும் பதாகைகள், துண்டு பிரசுரங்களுடன் காமராஜர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் சாலையில் அமர்ந்த செவிலியர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருந்ததால் போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு அனைத்து செவிலியர்களும் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு காமராஜர் சாலையில் இருந்து உழைப்பாளர் சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமாக மாநகர காவல் துறை சார்பில் மெரினா கடற்கரை பகுதிகளில் போராட்டம், மனித சங்கிலி, பேரணி, உண்ணாவிரதம் ஆகியவை நடத்த தடை வித்துள்ளனர். அப்படி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சிட்டி போலீஸ் சட்டம் 41ன் படி வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த எச்சரிக்கையை மீறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒரே இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்ட பெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் தலைமை செயலகம் புறப்படுவதற்குள் அனைவரையும் அப்புறப்படுத்த போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து அவசர அவசரமாக போராட்டத்தில் ஈடுபட்ட  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டனர். தற்ேபாது 5 ஆயிரத்திற்கும் ே மற்பட்ட செவிலியர்கள் தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை ெசய்யப்பட்டுள்ளது.

Tags : protest ,nurses ,statue ,Marina , மெரினா உழைப்பாளர் சிலை
× RELATED அர்ஜெண்டினாவில்...