×

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மீது அவதூறு வழக்கு : திமுக சார்பில் எழும்பூர் கோர்ட்டில் தாக்கல்

சென்னை : முரசொலி நிலத்தின் மூலப்பத்திரம் தொடர்பாக அவதூறு பேசி வரும் பாஜக தலைவர் முருகனுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்..திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தாக்கல் செய்துள்ள மனுவில் வேலூரில் நடந்த பாஜக  கூட்டத்தில்  பேசிய பாஜக தலைவர் எல்.முருகன்,முரசொலி நிலத்தில்  மூலப்பத்திரம் தொடர்பு பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஏற்கனவே பாஜக  நிர்வாகி ஆர் சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மூலப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நீதிமன்றத்தில் சமர்பித்த பின்பும் தொடர்ந்து உள்நோக்கத்தோடு  முருகன் பேசி வருவருகிறார்.எனவே   அவதூறு சட்டத்தின் கீழ் முருகன் மீது நடவடிக்கை வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் 14வது  மாஜிஸ்திரேட்  நீதிமன்றம்   தவிசாரணை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags : Tamil Nadu ,BJP ,L. Defamation ,DMK ,Egmore Court , L. Murugan, Egmore
× RELATED தமிழ்நாடு ஜனநாயகத்தை...