தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றலைகளால் 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிழக்கு திசை காற்றலைகளால் 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

சென்னை, புறநகரில் 48 மணி நேரத்திற்க்கு காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவும். பிப். 1,2 ஆகிய தேதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா, குமரி கடலுக்கு மீனவர்கள் செல்லம் வேண்டாம். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>