×

ஜன.31 முதல் பிப்.3ம் தேதி வரை போலியோ முகாம்

பெங்களூரு,: கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள 67 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் வரும் 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 23ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. மாநிலத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்து வருகிறது. இவ்வாண்டு சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலியோ பூத் அமைக்கப்படுகிறது. சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அரசு மருத்துவமனையில் முதல்வர் எடியூரப்பாவும், பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் முறையே தொடங்கி வைக்கிறார்கள். 198 வார்டுகளில் சுகாதார அதிகாரிகள் தொடங்கி வைக்கிறார்கள்.


பிற மாநகரங்களில் மேயர், நகரசபைகளில் அதன் தலைவர் அல்லது கமிஷனர்கள், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை தொடங்கி வைக்கிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்பட பல அமைப்புகளும் சொட்டு மருந்து கொடுக்கும் முகாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். போலியோவை ஒழிப்பதற்காக மேற்கொள்ளும் சொட்டு மருந்து வழங்கும் திட்டத்திற்கு மக்கள் தாமாக முன்வந்து உதவி செய்ய வேண்டியது அவசியமாகும்.

பெங்களூருவில் 10 லட்சத்து 79 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 456 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 324 நடமாடும் குழுவினர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 922 ஊழியர்கள் பணியில் ஈடுப்படுகிறார்கள். 3 ஆயிரத்து 340 பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. 749 கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நான்கு நாட்கள் கோவிட் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார். பெங்களூருவில் 10 லட்சத்து 79 ஆயிரம்  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 456 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

Tags : Polio Camp , Polio Camp from Jan.31 to Feb.3
× RELATED திருச்சியில் 1,695 மையங்களில் போலியோ...