×

அதிமுக கல்வெட்டு உடைப்பு அமமுக நிர்வாகிகள் மீது புகார்

அண்ணாநகர்: திருமங்கலம் 100 அடி சாலை சந்திப்பில் உள்ள அதிமுக கல்வெட்டை நேற்று முன்தினம் அமமுகவை சேர்ந்த சிலர் உடைத்து அகற்றிவிட்டு, அங்கு அமமுக கல்வெட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி பழைய திருமங்கலம் காந்தி தெருவை சேர்ந்த அதிமுக நிர்வாகி பாலசுப்பிரமணி (47), திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அமமுக வில்லிவாக்கம் பகுதி செயலாளர் காளிதாஸ் மற்றும் சிலரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது, காவல் நிலையம் முன்பு கூடியிருந்த இருதரப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Tags : AIADMK ,executives , Complaint against AIADMK executives for AIADMK inscription breakage
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...