100 நாளில் பிரச்னைகளுக்கு தீர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கருணாஸ் எம்எல்ஏ வரவேற்பு

விருதுநகர்: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்எல்ஏ விருதுநகரில் நேற்று அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி செய்யத் தவறியதை, திமுக ஆட்சி வந்த 100 நாளில் செய்து முடிப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை வரவேற்கிறோம். சசிகலா வீடு திரும்பியதும், நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக சந்திப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா, அமமுகவுடன் கூட்டணியா என எந்த முடிவும் செய்யவில்லை. முதல்வர் அழைத்து பேசினால் தான் கூட்டணி முடிவாகும். என்னை வைத்து எனது தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக 2 வருடங்களாக தொகுதி பக்கமே செல்லவில்லை. தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் திருவாடனை தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என்றார்.

Related Stories:

>