31ம் தேதி நிர்வாக குழுவில் ராமதாஸ் அறிவிப்பார் கூட்டணி தொடர்பாக இதுவரை பேசவில்லை: பாமக தலைவர் ஜி.கே.மணி பேட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, நேற்று அளித்த பேட்டி: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, 38 மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும்  மக்கள் திரள் அறப்போராட்டம் நாளை (இன்று) நடக்கிறது.   20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்ட நிலையில், அதை தளர்த்தி இன்றைய தினம் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள்.  தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை பேசவில்லை. 31ம் தேதி எங்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூடுகிறது. அதன் பின்பு ராமதாஸ் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>