×

யானை மீது தீ பந்தம் வீசப்பட்ட விவகாரம்: அனுமதியின்றி செயல்பட்ட 55 விடுதிகளை மூட நோட்டீஸ்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, மாவனல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானை மீது, விடுதி உரிமையாளர்கள் தீபந்தத்தை தூக்கி வீசினர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு யானை உயிரிழந்தது.  இது தொடர்பாக தனியார் தங்கும் விடுதியை சேர்ந்த ரேமன்ட் டீன், பிரசாந்த் ஆகியோர் கைதாகினர். அந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் குடியிருப்புக்களுக்கான அனுமதி பெற்று சிலர் தங்கும் விடுதி நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதுபற்றி வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில் மாவனல்லா பகுதியில் மட்டும் 55 தனியார் தங்கும் விடுதிகள் குடியிருப்புக்களுக்கான உரிமம் பெற்று செயல்படுவது தெரியவந்தது. அவைகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

Tags : hotels , Elephant fire case: Notice to close 55 hotels operating without permission
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்