×

தங்கவயல் எம்.ஜி. மார்க்கெட்டில் கடைகளை காலி செய்ய வியாபாரிகளுக்கு நோட்டீஸ்

தங்கவயல்: தங்க வயல் நகரசபை கடைகளை இ.ஆக்சன் மூலம் பொது ஏலம் விட இருப்பதால் வியாபாரிகள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த 23 ம் தேதி நகரசபை வியாபாரிகளுக்கு சிலருக்கு நோட்டீஸ் வழங்கியது. இதைதொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் மிச்சமுள்ள வியாபாரிகளுக்கு தொடர்ந்து நோட்டீஸ் வழங்கபட்டு வருகிறது. தங்கவயல் எம்.ஜி. மார்க்கெட் கடைகளை வழங்க வேண்டும் என்று கோரி, கடந்த 18ஆம் தேதி முதல் வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு எம்.ஜி.மார்க்கெட்டுக்குள் அமர்ந்து நான்கு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்திய பிறகு 21ம் தேதி மாலை, தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் 23ம் தேதி தங்கவயல் நகரசபை ஊழியர்கள் ராபர்ட்சன் பேட்டையில் உள்ள நகரசபை கடைகளின் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

அதில் நீதிமன்ற உத்தரவு படி நகரசபைக்கு சொந்தமான கடைகளை இ.ஆக்சன் மூலம் பொது ஏலம் விட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே  வாடகை நிலுவை தொகையை செலுத்தி விட்டு கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இதை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ ஒய்.சம்பங்கி தலைமையில் பெங்களூரு சென்று வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அவரிடம் இ.ஆக்சன் மூலம் பொது ஏலம் விடாமல்  பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வரும் தங்களுக்கே கடைகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். சங்க நிர்வாகிகளிடமும் மாவட்ட கலெக்டரிடமும் விவரங்களை கேட்டறிந்த அமைச்சர் நாகராஜ் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
எனவே தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று வியாபாரிகள் நம்பி இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் நேற்றுமுதல் நகரசபை ஊழியர்கள் ராபர்ட்சன் பேட்டையில் உள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் நோட்டீசை வழங்கினர்.



Tags : merchants ,shops , Goldfields MG Notice to merchants to vacate shops in the market
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...