முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

செய்யூர்:  தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஜமீன் எண்டத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  இதில், வட்டார மருத்துவ அலுவலர் பிரியா மற்றும் அங்கு பணியாற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், ‘ஊசி போட்டுக்கொண்ட அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என வட்டார மருத்துவ அலுவலர் பிரியா தெரிவித்தார்.

Related Stories:

>