பழங்கால கற்சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூர்:  உத்திரமேரூர் பேரூராட்சி 14வது வார்டு குழம்பரேஸ்வரர் கோயில் தெருவில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, ஊழியர்கள் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிலை, நான்கடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கருங்கல் சிலை ஒன்று இருந்தது. இதையறிந்ததும், ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். பரபரப்பு நிலவியது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த சிலை, சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்டது. இது, மூத்த தேவி சிலை. இதனை ஜேஸ்டாதேவி  எனவும் அழைக்கப்பட்டது என்றனர். மேலும், சிலையின் கழுத்தில் அணிகலன்கள் அணிந்தபடியும், வலப்புறம் காகம் உருவம் படித்தும் காணப்படுகிறது. இதையடுத்து, இச்சிலையை, அப்பகுதி மக்கள் எடுத்து தூய்மை செய்து, குழம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் வைத்து வழிபட துவங்கினர்.

Related Stories:

More
>