×

அதிமுகவுக்கு மாற்று தேமுதிகதான்: விஜயகாந்த் மகன் அதிரடி

சென்னை: தமிழக தேர்தல் களத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அதிமுகவுக்கு மாற்று என்றால் அது தேமுதிக தான் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு கொடுத்தவர், வறுமை மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனக் கூறிய ஒரே தலைவர் விஜயகாந்த். மக்கள் ஆதரவு தராததால் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிமுக, திமுகவிற்கு மாற்று தேமுதிக தான்.

சட்டமன்றத்தில் தேமுதிக குரல் ஒலிக்கும். செல்லும் பாதை வேறாக இருந்தாலும், இலக்கை அடையாமல் விஜயகாந்த் ஓயமாட்டார். விஜயகாந்த் தோற்று விட்டால், காமராஜர் தோற்றதை கூறுவது போல ஆகிவிடும். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தேமுதிக அங்கீகாரம் பெற வேண்டும். விஜயகாந்த்தை போல் ஊழலை ஒழிப்பேன் என்று எந்தத் தலைவராலும் கூற முடியாது. அதிமுகவில் நிறைய குழப்பங்கள் உள்ளன.

சசிகலா குணமடைந்து தமிழகம் திரும்ப வேண்டும். தேமுதிக தொடங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் ஓயமாட்டோம். சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து கூற முடியும். கூட்டணி அமைத்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். அதே சமயம், தனித்து நிற்கவும் பயமில்லை. இப்போதைக்கு அவரவர் பணிகளை செய்து வருகிறோம்.


Tags : Temujin ,son Action ,AIADMK ,Vijaykanth , The alternative to AIADMK is Temujin: Vijayakanth Son Action
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...