×

இந்தியா பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும், உலகம் வெற்றி பெற உதவியாக இருக்கும்: டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

டெல்லி: கடந்த 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாடு கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். ‘4வது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் காணொலி காட்சி வழியாக உரையாற்றினார். உலகம் முழுவதும் 400க்கும் அதிகமான மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 25ம் தேதி உரையாற்றினார்.

இந்நிலையில், காணொலி காட்சி வழியாக பேசிய பிரதமர் மோடி; தற்போது, இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்துள்ளன. இந்தியாவில் இருந்து இன்னும் சில தடுப்பூசிகள் வர உள்ளதை உலக பொருளாதார மையத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த கடுமையான நேரத்தில், ஆரம்பம் முதலே, சர்வதேச கடமையை இந்தியா கையில் எடுத்து கொண்டது. பெரும்பாலான நாடுகள் மூடப்பட்ட நிலையில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடிமக்களை அழைத்து வந்துள்ளோம். 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து, பல நாடுகளில் லட்சகணக்கான உயிர்களை இந்தியா காத்துள்ளது.

நாட்டில் கடந்த 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சியில் உரையாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில மாதங்களில், 300 மில்லியன் முதியவர்கள் மற்றும் நோய்க உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான எங்கள் இலக்கை அடைவோம் என்றார். அச்சங்களுக்கிடையில், 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் சார்பாக உலகத்தின் மீதான நம்பிக்கை, நேர்மறை மற்றும் நம்பிக்கையின் செய்தியுடன் நான் உங்கள் முன் வந்துள்ளேன்.

நேரடி பணப்பரிமாற்ற திட்டம் மூலம் 760 மில்லியன் மக்கள் இந்தியாவில் பயன்பெற்றுள்ளனர். பொது மக்களின் பங்களிப்பு மூலம், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உருப்பெற்றது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடையூறுகள் மற்றும் பிரச்னைகளை இந்தியா திறம்பட சமாளித்தது. இந்தியா பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும், உலகம் வெற்றி பெற உதவியாக இருக்கும் என கூறினார்.


Tags : victory ,Modi ,India ,conference ,Davos ,speech , Every victory that India achieves will help the world win: Prime Minister Modi's speech at the Davos conference
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு