உலக சுகாதார அமைப்பு பாராட்டியது: பேரிடர் காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா உதவிகரம்...மத்தியமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.!!!

டெல்லி: பேரிடர் காலத்தில் மொத்தம் 150 நாடுகளுக்கு இந்தியா, மருத்துவ பொருட்களை வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்வியின் 14-வது ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய மத்தியமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக பெருமிதமாக தெரிவித்தார். பேரிடர் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் பிரச்னையை சரி செய்ய முடியும் என்றும் கூறினார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நெருக்கடியாக காலத்தில் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி அதிகம் தேவைப்பட்டது. அதனால் பெரும்பாலான நாடுகள் தங்களால் இயன்ற உதவியை மற்ற நாடுகளுக்கு செய்து வந்தன. அந்தவகையில் கொரோனா காலத்தில் இந்தியாவின் மருத்துவ உதவிகள் உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்டது என்றார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. உலகில் 195 சுதந்திர இறையாண்மை கொண்ட நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>