×

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி, 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Polio Drop Camp ,Centers ,Tamil Nadu , Polio Drop Camp at 43,051 Centers in Tamil Nadu from 31st: Health Department Information
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!