தேசிய கொடியை அவமதித்த 5 போலீசார் சஸ்பெண்ட்: மாவட்ட போலீஸ் எஸ்பி அதிரடி

பெங்களூரு: குடியரசு தினவிழாவின் போது தேசிய கொடிக்கு அவமானம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட எஸ்.பி. சைதுலுஅடாவத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதே போல் பல்லாரி மாவட்டம் சண்டூர் தாலுகா டவுன் பகுதியில் அமைந்துள்ள சிவாஜி வித்யமந்திரா பகுதியில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. துகாராம் உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய கொடி ஏற்றும் போது தேசிய கீதம்  பாடுவதற்காக துறையை சேர்ந்த ரகுபதி, வெங்கடேஷ்நாயக், காலிங்கப்பா, ஜம்புநாத், வேணுகோபால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதே போல் இவர்கள் 5 பேருக்கும் அப்பகுதியில் பணி வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் 5 பேரும் கொடி ஏற்றும் போது அங்கில்லை. இதன் மூலம் ேதசிய கொடிக்கு இவர்கள் அவமானம் செய்துள்ளனர். இது குறித்து துணை மண்டல டி.எஸ்.பி, அறிக்கை வழங்கினார். அதன் அடிப்படையில் 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார். 5 பேரும் கொடி ஏற்றும் போது அங்கில்லை. இதன் மூலம் ேதசிய கொடிக்கு இவர்கள் அவமானம் செய்துள்ளனர்.

Related Stories:

>