சென்னையில் பிப். 18ல் ஐபிஎல் வீரர்கள் ஏலம்: ஏலத்துக்கு முன்பாக அணிகளின் நிலை

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் அடுத்த மாதம் 18ன் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2021 சீசன் தொடரை வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவிலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இடம் பெறலாம் என்ற நிலையில், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஏலம் நடைபெற உள்ளது. பிப். 4ம் தேதி வரை வீரர்களை ‘டிரேடிங்’ மூலம் மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ‘மினி ஏலம்’ சென்னையில் பிப். 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.

Related Stories:

>