சமக ஆலோசனை கூட்டம்

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் 6 நாட்கள் பங்கேற்கும் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடங்களை சமத்துவ மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

வேலூர் மற்றும் சென்னை கிழக்கு மண்டலத்தில் 28ம் தேதி (இன்று) மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து, 29ம் தேதி தஞ்சை மற்றும் திருச்சி மண்டலத்திலும், 30ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவில் பகுதியிலும், 31ம் தேதி சேலம் மண்டலத்திலும் நடைபெறும். அதேபோல், பிப்.1 ம் தேதி கொங்கு மண்டலம் வடக்கு மற்றும் தெற்கிலும், 2ம் தேதி விழுப்புரம் மற்றும் சென்னை மேற்கு மண்டலத்திலும் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என சமத்துவ மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>