×

நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை

நெல்லூர்: நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். நெல்லூர் மாவட்டம் இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிக்கு 15 படகில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தனர். தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்களை விரட்டி சென்றனர். விரட்டிச் சென்று 180 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 15 படகுகளையும் கைப்பற்றினர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட 180 பேரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினார் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆந்திர மீனவர்களால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Andhra Pradesh ,fishermen ,sea ,Nellore ,government ,Family members ,Tamil Nadu , 180 Andhra Pradesh fishermen arrested for fishing in deep sea in Nellore: Family members
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...