பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா:  நெஞ்சுவலி காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (48). இந்திய அணிக்காக (1992 - 2008) மொத்தம் 113 டெஸ்டில் 7212 ரன், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன் மற்றும் 100 விக்கெட் எடுத்துள்ளார். இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக உள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காலை வழக்கம்போல் வீட்டிலேயே ‘டிரெட் மில்’ பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கங்குலி மயங்கி விழுந்தது தெரிய வந்தது. இந்நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, சில தினங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>