×

தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்!!

அயோத்தி : உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில், தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, வழக்கமான நடைமுறைக்கு பிறகு அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் பாபர் மசூதி கட்ட இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து விரைவில் கோயில் கட்டும் பணி தொடங்க உள்ளது.

இந்நிலையில், நாட்டின் 72வது குடியரசு தினமான நேற்று, அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணி தேசியக்கொடியை ஏற்றி வித்தியாசமான முறையில் தொடங்கி வைக்கப்பட்டது. மசூதி கட்ட அமைக்கப்பட்டுள்ள இந்தோ - இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி, தேசியக்கொடியை ஏற்றினார். அறக்கட்டளையின் 12 உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டு, மசூதி கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.

அயோத்தி மசூதி வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சமுதாய சமையல் கூடம், நூலகம்  உள்ளிட்டவை இருக்கும். இந்த மசூதி வட்ட வடிவில், சுமார் 2000 ஆயிரம்  பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்பட உள்ளது. அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் மாதிரி வரைபடங்களும் அண்மையில் வெளியிடப்பட்டது. புதியதாக கட்டப்படும் மசூதிக்கு, ‘பாப்ரி மஸ்ஜித்’ என்பதற்கு மாற்றாக ‘தனிபூர் மஸ்ஜித்’ என்று அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : mosque ,Ayodhya , அயோத்தி
× RELATED ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் பூஜை...