×

சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை

சீர்காழி: சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவரை காவல்துறை என்கவுண்டர் செய்தது. போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற போது கொள்ளையர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 3 கொள்ளையர்களிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த தன்ராஜ்.

தனது மனைவி, மகன், மருமகளோடு ஒன்றாக வசித்து வரும் இவர் நகை அடகுக்கடை வைத்துள்ளதோடு, நகைகளை மொத்த விற்பனையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை தாக்கிவிட்டு உள்ளே இருந்து 16 கிலோ தங்க நகைகளையும், தன்ராஜின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் தன்ராஜின் மகன், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர். அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த சம்பவங்கள் சீர்காழியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sirkazhi ,jewelery robbery incident ,robbers , Sirkazhi jewelery robbery incident ..! Police encountered one of the 3 robbers who tried to escape
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்