சசிகலா நிலைப்பாட்டை பொறுத்து எனது அரசியல் நிலைப்பாடு இருக்கும்: கருணாஸ் பரபரப்பு

புதுக்கோட்டை, ஜன.27:புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை. எம்எல்ஏக்கள் தன்னை முதல்வராக ஆக்கியுள்ளனர் என்று முதல்வர் கூறிவருகிறார். கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும். அங்கு நடந்ததைப் பற்றி நான் கூறமாட்டேன். ஐந்து ஆண்டுகளில் அரசியலில் எவ்வளவு மாற்றங்கள் வந்துள்ளன. நாளை என்ன நடக்கும் என்று கூறமுடியாது.சசிகலா வெளியே வந்த பிறகு அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பார்த்த பிறகே என்னுடைய அரசியல் நிலைப்பாடு இருக்கும். மக்களுக்கு சேவையாக பயன்படுத்த வேண்டிய அரசியல், தற்போது எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ரவுடிகளை எல்லாம் அரசியலில் ஒரு கட்சியினர் சேர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>