ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குடியரசு தின விழா

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தினவிழா நேற்று, பஸ் நிலையம் அருகில் கொண்டாடபட்டது. காங்கிரஸ் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார்.  அதன் பின்னர்,  மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.   காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை,  தலைவர் தங்கராஜ், துணை தலைவர் சுரேஷ், யூத் நகர கமிட்டி தலைவர் கணபதி, மாவட்ட செயலாளர் ரங்கநாதன், வட்டார தலைவர் முருகேசன் , நகர பொறுப்பாளர் அமான் குமார் உள்ளிட்டோர்  பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழாவில், தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல காஞ்சிபுரம் நகரத்தில் முன்னாள்  மாவட்டத் தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பத்மநாபன்,  நாதன், அன்பு,  சாதிக்பாட்சா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: