×

மருந்து கடைகளில் திருடியது ஏன்?: கொள்ளையன் வாக்குமூலம்

சென்னை: சென்னை சைதாப்ேபட்டை வி.எஸ்.முதலி தெருவில் ரமேஷ் (47) என்பவர், ஸ்ரீவசந்தம் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டு டிசம்பர் 29ம் தேதி உடைக்கப்பட்டு சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல ஜனவரி 14ம் தேதி குமரன் காலனியில் உள்ள ஸ்ரீபாலாஜி மெடிக்கலிலும் அதேமாதிரி திருடுபோனது. கடந்த 20ம் தேதி சைதாப்பேட்டை எத்திராஜ் நகர் மற்றும் தனபால் தெருவில் உள்ள மெடிக்கல் ஷாப்களின் பூட்டுகளை உடைத்து குறிப்பட்ட மாத்திரைகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து  அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவுப்படி, சைதாப்பேட்டை துணை கமிஷனர் அனந்தராமன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபல கொள்ளையன் பிங்கி (எ) அருண்குமார் (21) மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளையன் அருண்குமார் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: ‘‘நான் போதை பழக்கத்துக்கு அடிமையானவன். சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றினேன். இதனால் 4 மணி நேரத்திற்கு சொர்க்கத்தில் இருப்பது போல் இருந்தது.
இதற்காக மருந்து திருடினேன். எப்படியும் போலீசாரிடம் சிக்கி கொண்டால் மாத்திரை, பணம் திருட்டுக்குஒரே தண்டனை தான். இதனால் பணத்தையும், சேர்த்து திருடினேன் என்று போலீசிடம் தெரிவித்துள்ளான்.

Tags : drug stores ,robber , Why was it stolen from drug stores ?: Confession of robber
× RELATED நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது