×

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது

சென்னை: தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையில் 20 அதிகாரிகளுக்கு இந்திய குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் துறை  அதிகாரிகளுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் வழங்கப்படுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் தகைசால் பணிக்கான விருதுகள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியம் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், கோவை தமிழ்நாடு சிறப்பு காவல்  4ம் அணி இன்ஸ்பெக்டர் மணிகண்டகுமார்  ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுகள் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, சிறப்பு புலனாய்வு பிரிவு குற்றப்பிரிவு சிபிசிஐடி ஐஜி கபில் குமார் சி.சரத்கர், சென்னை காவல் துறை  (நிர்வாகம்) ஐஜி சந்தோஷ்குமார், சேலம் மாவட்ட ஆயுதப்படை எஸ்பி ஜான்சன், சென்னை பரங்கிமலை உதவி கமிஷனர் ஜீவானந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் டிஎஸ்பி முரளி, காஞ்சிபுரம் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு துறை டிஎஸ்பி கே.வி.கலைசெல்வம், சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.கந்தசாமி,

தமிழ்நாடு சிறப்பு காவல் 9ம் அணி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சென்னை ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்புதுறை இன்ஸ்பெக்டர் சுகன்யா, சென்னை தலைமையிட தனி பிரிவு குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஈரோடு சிறப்பு இலக்கு படை சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், சென்னை தலைமையிடம்  ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு துறை சப்-இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன், மாநில குற்ற ஆவண காப்பகம் கணினி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டம் க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், சென்னை  தலைமையிடம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை தலைமை காவலர் கருணாகரன், தலைமை காவலர் பா.ரமேஷ் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Maheshkumar Agarwal ,Chennai , President's Award to 20 officers, including Chennai Police Commissioner Maheshkumar Agarwal
× RELATED விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி...