இந்திய ராணுவத்திற்காக அணிவகுத்த ஒரே பெண் அதிகாரி... 72வது குடியரசு தின விழாவில் சிங்கப்பெண்கள்

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற 72வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பெண்கள்...

*குடியரசு தின விழாவை முன்னிட்டு 140 ஏர் டிஃபென்ஸ் படைப்பிரிவின் கேப்டன் ப்ரீத்தி சவுத்ரி, இந்திய ராணுவத்திற்காக அணிவகுத்து வந்த ஒரே பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றார்.  

*இந்திய விமானப்படையில் போர் விமானங்களில் பணியாற்றும் மூன்று பெண் விமானிகளில் ஒருவரான பாவனா காந்த், இந்திய விமானப்படையின் அணிவகுப்பில் அணிவகுத்து சென்றார்.

*குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் 2-வது ஆண்டாக வழி நடத்தி  இருக்கிறார்.

*குடியரசு தின அணிவகுப்பில் ஃப்ளை பாஸ்ட் எனப்படும் அதிவேக விமானங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையை சுவாதி ரத்தோர் பெற்றார். இவருக்கு வயது 28.இவர் நான்கு ஹெலிகாப்டர்களை வழிநடத்தும் வகையில் எம்.ஐ-17 வி5 ஹெலிகாப்டரில் ஐ.ஏ.எஃப் கொடியுடன் பறந்தார்.

*மகாராஷ்டிராவின் என்.சி.சி இயக்குநரகத்தின் மூத்த கீழ் திகாரி சம்ருத்தி ஹர்ஷல் தலைமையில் என்.சி.சி. மகளிர் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

Related Stories: