×

விவசாயிகள் மீதான தாக்குதல் மத்திய அரசின் காட்டுமிராண்டி தனத்தை காட்டுகிறது : மனித நேய மக்கள் கட்சி

சென்னை : மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 100 நாட்களுக்கு மேலாகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியான முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாத மத்திய அரசு, தற்போது  டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை வீசியும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் உள்ளது கண்டிக்கத்தக்கது.

விவசாயிகள் மீது குடியரசு தினத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக அரங்கில் நமது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பாஜக அரசின் காட்டுமிராண்டித் தனத்தை எடுத்துக்காட்டுகிறது.  உடனடியாக மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெறப் வேண்டுமென கோருகின்றேன், எனத்தெரிவித்துள்ளார்.

Tags : attack ,Humanist People's Party ,peasants , Humanist People's Party
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு