×

அமராவதி பிரதான கால்வாயில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றம்

உடுமலை :அமராவதி அணையில் இருந்து செல்லும் பிரதான வாய்க்கால் மூலம் சுமார் 25,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக, பிரதான கால்வாய் ஓரம் இருந்த மரங்கள் முறிந்து கால்வாய்க்குள் விழுந்தன. இதனால் நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக அப்பகுதியில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்போது, கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. பெரிய அளவில் மரங்கள் முறிந்து கிடந்தன. இதுபற்றிய செய்தி கடந்த 18-ம்தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியாகி இருந்தது. இதையடுத்து, மரத்தை அகற்ற பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர். தற்போது அனைத்து மரங்களும் அகற்றப்பட்டு, கால்வாயில் தடையின்றி தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Removal ,canal ,Amravati , Udumalai: About 25,200 acres of land is irrigated by the main canal from the Amravati Dam.
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்