×

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள் நிறுவனம்!!

டெல்லி: இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை நள்ளிரவில் வெளியிட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர், 195ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாகத்திற்கு வந்தது. அந்த நாளை நாம் குடியரசு தினம் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில், தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 72வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 50 ஆண்டுக்கு பிறகு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்காமல் இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படை வீரர்களும் பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்புகளும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், கலாச்சார பண்பாட்டுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச்சின்னத்தில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி மூலம் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.வண்ணமயமான தேசத்தை உயிர்ப்பிக்கும் துடிப்பான கலாசாரங்களின் வரம்பை பிரதிபலிக்கும் விதமாக மும்பையை சேர்ந்த கலைஞர் ஆன்கர் பாண்டேகர் வரைந்துள்ள ஓவியத்தை கூகுள் நிறுவனம் டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Tags : Google ,eve ,Republic Day ,India , India, Special Doodle, Google Company
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!