×

இந்தாண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்...! மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். மேலும் பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இதன்படி பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் இருப்பினும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

அதே சமயம் கொரோனா காரணாமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காரணாமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Tags : election ,Minister Senkottayan ,teachers , Changes will be made in this year's general election ...! Choices as simple as students and teachers expect: Minister Senkottayan
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...