72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்... முதன்முறையாக வங்கதேச படையினர் அணிவகுப்பில் பங்கேற்பு!!

டெல்லி : 72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ராஜபாதை குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்வையிட 25,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

டெல்லியில்  72வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

*நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

*பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டன. பின்னர் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். முப்படைகளின் வலிமைகள் மற்றும் சாகசங்கள் இந்நிகழ்வின் போது பறைசாற்றப்பட்டன.ரஃபேல், ஜாகுவர், மிக்-29 ஆகியவை அணிவகுப்பில் இடம்பெற்றன.

* ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

*டெல்லி குடியரசு தின விழாவில் வங்கதேசத்தின் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.வங்கதேசம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.1971-ல் இந்தியாவின் உதவியால் வங்கதேசம் எனும் புதிய நாடு உதயமானது.

*தேசத்தின் வலிமையை வெளிப்படுத்தும் ராணுவ தளவாட வாகனங்கள் அணிவகுத்தன.ராணுவ தளவாட அணிவகுப்பை தொடர்ந்து காலாட்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.காலாட்படை ரெஜிமெண்ட்டுகள் அடுத்தடுத்து அணிவகுத்தனர்.ஒரு ரெஜிமெண்ட்டில் வழக்கமாக 196 வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பர்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டது.

Related Stories: