×

8 மாதங்களில் முதன்முறையாக ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மிக மிக குறைவு ... கொரோனா இல்லாத நாடாக உருமாறும் இந்தியா!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.  தற்போது புதிய பாதிப்பு 9 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும்  குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.53 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  இறப்பு விகித நிலவரம்  குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,102 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,06,76,838 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 117 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,587 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,901 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின்  எண்ணிக்கை 1,03,45,985 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,77,266 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 96.90% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக  குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.66% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் இதுவரை மொத்தம் 20,23,809 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 7,25,577 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 19,30,62,694 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : victims ,country ,India , India, Corona, Virus
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...