×

வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்திய பயனர்களை ஒருதலைபட்சமாக நடத்துகிறது: நீதிமன்றத்தில் மத்திய அரசு கவலை

புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிமை  கொள்கை குறித்த அறிவிப்ைப வெளியிட்டது. இதன்படி பயனர்களின் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து  கொள்ளப்படுமென தகவல்கள் வெளியானது. இதை வாட்ஸ்அப் மறுத்தாலும் தனியுரிமை கொள்கை குறித்து பயனர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இது பயனர்களின் உரிமையை பாதிப்பதாக கூறி  டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீவ் சச்தேவா ன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனர் சேத்தன் சர்மா, ”வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்திய பயனர்களை தனியுரிமை கொள்கை மாற்றத்தின் மூலமாக ஒருதலைபட்சமாக நடத்துவதற்கு உட்படுத்துவது கவலையளிப்பதாக இருக்கிறது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தினால் ஐரோப்பிய பயனர்களுக்கு வழங்கப்படும் தனியுரிமை கொள்கையானது பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படும் எந்தஒரு தகவலையும் தடை செய்கிறது. ஆனால் இந்த விதிமுறை இந்திய பயனர்களுக்கு வழங்கப்படும் தனியுரிமை கொள்கையில் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகின்றது” என்றார்.  இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Indian ,court , WhatsApp company Treats Indian users unilaterally: Federal government concerns in court
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...