ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த ஆணைப்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து புனரமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதையொட்டி, கோயில்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 2 நாட்களும் பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து, நேற்று காலை மூன்றாம் கால யாகவேள்வி பூஜை நடத்தி, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

Related Stories:

>