சாலை விபத்தில் வாலிபர்கள் பலி

பெங்களூரு: கமலாபுரா அருகில் பைக் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  கொப்பள் மாவட்டம் நவலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி (22), குமார் (23). இவர்கள் ஷிவமொக்கா மாவட்டத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டர்களாக பணி புரிந்து வந்தனர்.இந்நிலையில் இவர்கள் சம்பவத்தன்று காலை வேலை விஷயமாக பைக்கில் பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டை தாலுகா கமலாபுரா கிராமத்துக்கு வந்தனர்.  இங்கு வேலை முடித்துக்கொண்டு மறுபடியும் கொப்பள் டவுன் பகுதிக்கு புறப்பட்டனர். செல்லும் போது கிராமத்தை சேர்ந்த தனது நண்பர் ஒருவரையும் பைக்கில் அழைத்து சென்றனர். இவர்கள் கமலாபுரா மவுல்யவந்த கோவில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பைக் திடீர் என்று சாலையில் கவிழ்ந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>