தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆசிட் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்: டிரைவர் உயிர் தப்பினார்

பல்லாவரம்: திருப்பூரை சேர்ந்த சக்திவேல் (45), சொந்தமாக பார்சல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பனியன் மற்றும் ஆசிட் ஆகியவை அடங்கிய பார்சல்களை, ஒரு சரக்கு வேனில் ஏற்றி சென்னை அனுப்பி வைத்தார். டிரைவர் சண்முகம் (52), வேனை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் பாலம் அருகே சென்றபோது, திடீரென பார்சல் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சுதாரித்துக் கொண்ட டிரைவர் சண்முகம், வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வேனில் இருந்த பனியன், ஆசிட் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சாம்பலானது.

Related Stories:

>